தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பது தான் தொண்டர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. எனவே அவர் தாமாக பதவி விலக வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி கூட்டிய நிர்வாகிகள் கூட்டத்தில் 77 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றதாக குறிப்பிட்டார்.
பதவி ஆசையிலும், சுயலாபத்திற்காகவும் தான் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாகவும் தினகரன் சாடினார். கடந்த டிசம்பர் 29இல் சசிகலாவை மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தான் கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கினர். எனவே பொதுக்குழுவை கூட்ட பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் தினகரன் கூறியுள்ளார்.
சசிகலாவால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். மேலும் இரட்டை இலை சின்னம் முடங்க காரணமான ஓ.பன்னீர்செல்வமும் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் தினகரன் மேலும் கூறியுள்ளார்.
Home
»
Tamizhagam
»
எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.மு.க. தொண்டர்களின் கோரிக்கை: டி.டி.வி.தினகரன்
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment