Monday, August 21, 2017

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின் பின்னதாக அதிமு கட்சியில் நிகழ்ந்த பிளவின் காரணமாக வேறுபட்டிருந்த இரு அணிகளும் இன்று மீண்டும் ஒன்றினைந்தன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இணைப்பின் மூலம் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பன்னீர்ச் செல்வம் தலைமையில், அதிமுகவின் வழிகாட்டு குழு உறுப்பினர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கியமான இலாகாக்கள் சில ஓ. பன்னீர் செல்வம் அணியினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தெரிய வருகிறது.

மேலும் விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடி, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை வெளியேற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer