ஆகஸ்ட் 21ம் திகதியான இன்று முழு அளவிலான சூரிய கிரகணம் நிகழவுள்ளது. சூரியன் சந்திரன் பூமி ஆகியவை ஓரே நேர்கோட்டில் கடந்து செல்லும் போது சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுவதுடன் கிட்டத்தட்ட 2 நிமிடங்கள் 36 விநாடிகளுக்கு பூமியில் இருள் சூழும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்,
மேலும் 99 வருடங்களுக்குப்பின் அமெரிக்காவில் முழு அளவில் தென்படப்போகும் இந் நிகழ்வை காண லட்சகணக்கான மக்கள் பூங்கா, வெட்டவெளி, மற்றும் மலைப்பிரதேசங்களிலும் திரண்டுள்ளனர். அதோடு இதன் போது விலங்குகள் குழப்படையலாம் என்றும் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடுத்த முழுச் சூரிய கிரகணம் 2024ம் ஆண்டளவிலே தோன்றுமெனவும் கூறப்படுகிறது.
Monday, August 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment