“கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வேண்டும். அதன்மூலம், வடக்கு - கிழக்கில் ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்” என்று விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் திருகோணமலை மாவட்ட மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “பலமான ஒரு மாற்றுக் கட்சி தமிழ் மக்களுக்குத் தேவை எனும் நோக்கில் நாம் இக்கட்சியை ஆரம்பித்திருக்கின்றோம். இந்த அரசாங்கம் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றே ஆட்சிக்கு வந்தது. இருப்பினும் ஊழல் ஒழிந்ததாக தெரியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினை சாடினார்கள். ஆனால் இதுவரை அந்த குற்றங்கள் கூட நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறிருக்க இந்த அரசாங்கத்திலும் ஊழல் அதிகரித்து விட்டது. அது வடக்கு மாகாண சபையையும் விட்டுவைக்கவில்லை.
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போது பல அபிவிருத்திகள் நடைபெற்றன. வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த நல்லாட்சியில் ஊழலே இடம்பெறுகின்றது.” என்றுள்ளார்.
Sunday, August 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment