மெட்ராஸ், கணிதன் மற்றும் கடம்பன் படங்களில் நடித்த நடிகை கேத்ரின் தெரசா தெலுங்கிலும் நடித்து வருகிறார். கவுதம் நந்தா படத்தில் கோபிசந்த் ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்துக்காக முதன் முதலாக அவர் நீச்சல் உடை அணிந்து நடித்தார். படம் தணிக்கைக்கு சென்றபோது கேத்ரின் தெரசாவின் நீச்சல் உடை காட்சிகள் சிலவற்றை வெட்டி எறிந்தனர். கவர்ச்சி தூக்கலாக இருந்த காட்சிகளை மட்டும் வெட்டிவிட்டு, சிலவற்றைவிட்டு வைத்ததால் படக்குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் ஏற்கனவே மும்பை நடிகை ஒருவர் டோலிவுட் படத்தில் நடித்த நீச்சல் உடை காட்சிக்கு தணிக்கையில் ஒரு வெட்டு கூட கொடுக்கவில்லை. ஆனால் கேத்ரின் காட்சிக்கு மட்டும் ஏன் வெட்டு தரப்பட்டது என தெரியவில்லை என பட தரப்பில் புகார் கூறினார்.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தபோது படத்தில் அணிந்த நீச்சல் உடையின் மேற்பாகத்தை (டாப்ஸ்) அணிந்துவந்து கேத்ரின் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏற்கனவே இந்த பாணியில் நடிகை இலியானா பட காஸ்டியூம்களை கவர்ச்சியாக அணிந்து வந்து பேட்டிகளில் பங்கேற்பார். அதை ஞாபகப்படுத்துவதுபோல் கேத்ரினாவும் செய்திருக்கிறார் என்று அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
Tuesday, August 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment