பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஜூலி தான் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் என சொல்லலாம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான அவரை முதலில் ரசிகர்கள் ஆதரித்தாலும், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அனைவரும் ஓவியாவுக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டனர்.
பிக்பாஸில் இருந்து ஜூலி ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், அவர் தன் முகநூல் பக்கத்தில் இந்த ஷோ பற்றி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
"வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், ஷோவில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல" என தெரிவித்துள்ளார்.
பிக் பாஸில் காட்டப்பட்டது தன் உண்மையான முகம் இல்லை என அவர் கூறவருகிறார் என தெரிகிறது.
Monday, August 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment