இரண்டு வருடங்களுக்குப் பிறகு சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் விவேகம். தற்போது இணையதளத்தில் விவேகம் படத்தைப்பற்றி பல சர்ச்சைகளும், விவாதங்களும் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் நடிகர் மன்சூர் அலிகான் விவேகம் படத்தில் வெளிநாட்டு சினிமா கலைஞர்கள் தான் அதிகமாக பணியாற்றியுள்ளனர். அதுவே தமிழ் சினிமா கலைஞர்களை வைத்து படம் எடுத்திருந்தால் இங்குள்ள ஃபெப்சி ஊழியர்களும், துணை நடிகர்களும் பயன் அடைந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நாம் அவரிடம் பேசிய போது, ஒரு திரைப்படம் என்பது அஜித் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லையே என்ற கேள்வியை முன்வைத்தோம், அதற்கு பதிலளிக்கும் விதமாக...
ஒரு கதாநாயகனாக அவர் சொல்ல வேண்டும் என்கிறேன். இயக்குனர் சிவா அவர்களை குற்றம் சொல்லலாம், இல்லையெனில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் அவர்களை குற்றம் சொல்லலாம். இது என் பணிவான வேண்டுகோள் தான். வெளிநாட்டு உபகரணங்களை நம் சண்டைப் பயிர்சியாளர்களுக்கு கொடுத்திருந்தால், இதைவிட சிறப்பாக செய்திருப்பார்கள். படமும் இன்னும் அதிகமாக வெற்றியடையும்.
ரஜினி, விஜய் இவர்களை மீறிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் அஜித் குமார். அதை நான் பாராட்டுகிறேன். மற்ற நடிகர்கள் போல் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் அஜித் இல்லை. அவர் சிறந்த மனிதர். தங்கமானவர். நான் சொல்வதில் அரசியல் எதுவும் இல்லை. இதை அரசியலாக்க வேண்டாம். அஜித் திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறார், ஏன் தமிழ் கடவுளான அப்பன் முருகன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடக்கூடாது. கோடான கோடி ரசிகர்களை தமிழ்நாட்டில் வைத்திருக்கும் அஜித்... நம்ம சாமி கோயில் உண்டியல்லையும் காசு போடலாமே... ஒரு ஆதங்கம் தான்! என்று தெரிவித்தார்.
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment