Monday, August 14, 2017

சுய விருப்புடன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரான பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர் மட்டக் கூட்டம் கட்நத 12ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்று அவர்கள் கேட்ட விளக்கங்களுக்கு எனது நிலைப்பாட்டினை தெளிவாகத் தெரிவித்தேன்.

எனினும், ஒரு சில தினங்களில் அமைச்சுப்பொறுப்பை விட்டுத்தருவது தொடர்பில் முடிவெடுத்து தெரிவிக்குமாறு கூறினர். இந்த நிலையில் எனது நிலைப்பாட்டினை இன்றைய தினம் தெரிவிக்கின்றேன். அன்று எதைச் சொன்னேனோ, அதையே தான் இப்போதும் சொல்கிறேன். சுய விருப்பின் பேரில் பதவி விலகப் போவதில்லை.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer