பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள ஆரவை, அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காமெடி நடிகை ஆர்த்தி கிண்டலடித்து கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆரவ் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பது போலவே நடிகை ஓவியா காட்டிக் கொண்டார். லவ் பண்ணலாமா என வெளிப்படையாகவே கேட்டார் ஓவியா.
ஆனால், அதை தவிர்க்கும் விதமாக நடந்து வந்தார் ஆரவ். சில சமயங்களில் அதை ரசிப்பது போலவும் நடந்து கொண்டார். மேலும், சில நாட்களாக ஓவியாவிடம் நெருக்கமாகவே பழகி வந்தார். அதே சமயம் அது நட்புடன் மட்டுமே எனவும் கூறிவந்தார். ஆனால், சில நாட்களாகவே, ஓவியா தவிர்க்கும் வகையில் அவர் பேசி வருகிறார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஆர்த்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ இருக்கு. இந்த சனிக்கிழமை குறும்படம் இருக்கு.. ஆரவின் லீலைகள்.. புதுசுக்காக பழசை வெறுக்கும் ஆம்பள ஜூலி.. பொம்பள சாபம் சும்மா விடாது” எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நிகழ்ச்சிக்கு புதிதாக நடிகை பிந்து மாதவி வந்துள்ளார். எனவே, இனிமேல் ஆரவ், ஓவியாவை ஒதுக்கிவிட்டு அவரிடம் நெருங்கி பழகுவார் என மனதில் நினைத்துதான் ஆர்த்தி இப்படி டிவிட் செய்துள்ளார் எனத் தெரிகிறது.
Thursday, August 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment