ஒத்த சொல்லா இருந்தாலும் ஒரேயடியா கட்டிங் பிளேயர் வச்சு நறுக்குற மாதிரி இருந்திச்சே... என்று வாழ்நாள் முழுக்க மனம் ஆறாமல் சுற்றும் கதைகள் ஏராளமுண்டு நாட்டில். ஒரு ஒற்றை சொல்லுக்காக ஒரு படமே வெகு கால பஞ்சாயத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது.இதற்கு எங்கு போய் முட்டிக் கொள்வது?
‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை உருவாக்கி சென்சாருக்கு அனுப்பினார் இயக்குனர் தரணிதரன்.
இவரது முந்தைய படைப்பு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’.
படத்தை பார்த்த சென்சார் அமைப்பு, இதில் வரும் ஒரு சொல்லை நறுக்க சொல்லி விட்டது.
“அந்த ஒரு சொல்லில்தான் இந்தப்படத்தின் ஜீவனேயிருக்கு. முடியாது” என்கிறார் தரணிதரன்.
“அப்படியென்றால் சென்சார் சர்டிபிகேட்டே கிடையாது” என்கிறார்களாம். ஒரு வருஷமா நீடிக்கும் இந்த பஞ்சாயத்தினால், படு அவஸ்தைக்கு ஆளாகியிருக்கிறார் தயாரிப்பாளர்.
அதைவிட மட்டமான சொற்கள் அரங்கேறுவதற்கு முன் இறங்கி வாங்க தரணிதரன்!
Tuesday, August 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment