இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான தளபதி அடங்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு, யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று சனிக்கிழமை முற்பகல் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்திய இராணுவம், அமைதிப் படையாக வடக்கு- கிழக்கில் செயற்பட்ட தருணத்தில் இடம்பெற்ற மோதல்களில் நூற்றுக்கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் பலியானர்கள். அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவுத் தூபியொன்றே கல்வியங்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அமைதிப் படையினால், யாழ். வைத்தியசாலைப் படுகொலை உள்ளிட்ட பல படுகொலைகள் நிகழ்த்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
Home
»
India
»
Sri Lanka
»
யாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினைவுத் தூபிக்கு இந்திய அதிகாரிகள் அஞ்சலி!
Saturday, August 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment