நுவரெலியா கிரெகரி ஏரியில் படகொன்றில் பயணித்த நிலையில் நீரில் மூழ்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். Jet Ski என்ற படகில் பயணித்த இரண்டு பெண்களே இவ்வாறு நீரில் மூழிகிய நிலையில், கடற் படையினர் சிலரால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசத்தை சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் தற்போது லண்டனில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கைக்கு சுற்றுலா வந்த இவர்கள் கிரெகரி ஏரியில் படகு ஓட்டிய போது,
படகினை கட்டுப்படுத்த முடியால் போனமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன் போது உடனடியாக செயற்பட்ட கடற்டையினர் இந்த இரண்டு பெண்களின் உயிரை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Friday, August 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment