Wednesday, August 30, 2017

2002 ஆம் ஆண்டு பிரசாந்த், சிநேகா நடிப்பில் வெளிவந்த  விரும்புகிறேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசி கணேசன். விரும்புகிறேன் திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த கதாநாயகி, சிறந்த துணை நடிகை என்று பல மாநில விருதுகளும் பெற்றது. அதன் பிறகு ஃபைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது சுசி கணேசன் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளிவந்த திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. இதுபற்றி இயக்குனர் சுசி கணேசன் கூறுகையில், பத்து வருடத்திற்கு முன் வெளியான திருட்டுப்பயலே படத்தின் முதல் பாகம் இன்றும் மக்கள் மனதில் புதிதாக பார்க்கப்படுகிறது. கதையின் கரு என்னவென்றால் அந்நிய நபர் உங்களுடைய ரகசியங்களை தெரிந்து கொண்டால், உங்களுடைய வாழ்க்கை அழிந்துவிடும் என்பதுதான். ஆனால் அதுமட்டும் தான் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி அல்ல, ஏனென்றால் முதல் பாகத்தின் கதாநாயகன் இறந்துவிடுவார். திருட்டுப்பயலே-2 படமும் அதே பாணியில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது, கதையின் அமைப்பும் மற்றும் கதாபாத்திரங்களும் முதல் பாகத்தில் இருந்து மாறுபட்டிருக்கும்.

மேலும், பத்து வருடத்திற்கு முன் திருட்டுப்பயலே போன்ற கதையமைப்புகள்  அதிர்ச்சியூட்டும் விதமாக பார்க்கப்பட்டது. தற்போது அதுபற்றி பேசுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. என் அக்கா தன் அறையின் ஜன்னல் கதவை திறந்து வைத்ததற்காக அப்பா திட்டினார். ஏனென்றால் எங்கள் வீட்டு அருகில் விளையாட்டு மைதானம் இருந்தது, யாரும் அங்கிருந்து உள்ளே எட்டி பார்க்ககூடாது என்று நினைத்தார். இந்த சம்பவம் நடந்தது முப்பது வருடத்திற்கு முன்பு. ஆனால் இன்று சமுக வலைத்தளங்களால் ஜன்னல் கதவை மறந்துவிட்டோம். நமது வீட்டு கதவு தகர்த்தெறியப்பட்டுள்ளது, யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம். அதே மாதிரி நமது பொருளாதாரமும், நமது சமுக கட்டமைப்புகளும் மாறிவிட்டன. இந்த மாற்றத்தை இப்படத்தில் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன் என்று இயக்குனர் சுசி கணேசன் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer