தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தயாரித்து நடித்து வரும் பில்லா பாண்டி. இப்படத்தின் படபிடிப்பு மதுரையில் நடைபெற்று வந்தது. தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் (TFPC), இந்திய திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கத்துக்கும் (FEFSI) முரண்பாடுகள் நிலவிவரும் நிலையில் பில்லா பாண்டி படபிடிப்பின்போது (FEFSI) உறுப்பினர்கள் தங்களின் தின ஊதியத்தை உயர்த்துமாறு கேட்டுள்ளனர்.
இதுபற்றி TFPC-யின் தலைவரான நடிகர் விஷாலிடம் முறையிட்டார் ஆர்.கே.சுரேஷ். பின்னர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு (FEFSI) உறுப்பினர்களை தவிர்த்து பிற ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்திகொள்ளலாம் என்று முடிவுசெய்தனர்.
நடிகர் விஷால் இதுபற்றி பேசுகையில், FEFSI உடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், நாங்கள் முன்பு அறிவித்த ஊதியத்தொகைதான் தரப்படும். சென்னை உயர்நீதிமன்றம் FEFSI அமைப்பு எந்த ஒரு படபிடிப்பையும் தடுத்த நிறுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.
இந்திய திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஃபெஃப்சி ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தை இன்று முதல் தொடங்க இருக்கிறோம். இங்கு 25,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதனால் TFPC வெளியே இருந்து ஆட்களை கொண்டுவரக்கூடது. கடந்த ஜூலை 31-ம் தேதியோடு ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்தது. அதனால் தான் ஊதிய உயர்வு வழங்க கேட்கின்றோம். FEFSI ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று செல்வமணி அறிவித்தார்.
இதனால் பல தமிழ் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
Friday, August 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment