Wednesday, August 30, 2017

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வியாழக்கிழமை குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிட உள்ளனர் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து, முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கடிதம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும், ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில், உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதுகுறித்து முறையிட ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். வரும் 31ஆம் தேதி நேரம் ஒதுக்கித் தருவதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால், சந்திப்புக்கான நேரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எப்படியும் 31ஆம் தேதி (நாளை) தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்னைகள் குறித்து ஜனா திபதியிடம் முறையிடுவார்கள்.

உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீசுக்கு விளக்கம் அளிப்பீர்களா அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கிறீர்களா?சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள, புற்றுநோய் வருவதற்குக் காரணமான குட்கா போதைப் பொருட்கள், போலீஸ் உயர் அதி காரியான ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு மாமூல் கொடுத்து, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது என்பதை நாங்கள் ஆதா ரங்களோடு, குட்கா விற்பனை செய்த கடைகளின் முகவரிகள் மற்றும் புகைப்படங்களோடு சட்டமன்றத்தில் காண்பித்தது உண்மை.

ஆனால், அதன் மீது இவ்வளவு நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு, இப் போது 40 நாட்கள் கழித்து உரிமைக்குழு நடவடிக்கை எடுப்பதற்கு காரணம் என்ன என்று நேற்று தெரிவித்து இருந்தேன். இன்றைக்கும் கூட குட்கா விற்பனை நடைபெறுவதாக செய்தி கள் வருகின்றன. இந் நிலையில் அவர்கள் எங்கள் மேல் நடவடிக்கை எடுப்பதாக நோட்டீஸ் அனுப் பியிருக்கிறார்கள். அதுகுறித்து நாங்கள் சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி, அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer