ஆசை ஆசையாக நடிக்க வந்த ஜோதிகாவுக்கு அவரது உறவினரே கட்டையை போட்டால் எப்படி? சூர்யாவின் படங்களை தொடர்ந்து தயாரித்து வந்த ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா மீது, விநியோகஸ்தர் கூட்டமைப்பு கடும் கோபத்திலிருக்கிறது.
அவரது முந்தைய படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தால், மூக்குடைந்து போயிருக்கிறார்களாம் அவர்கள்.
எனவே, ஞானவேல் ராஜா மற்றும் சூர்யா அவரது சம்பந்தப்பட்ட எவர் படமாக இருந்தாலும் ரெட் அடிங்க என்று கூறிவிட்டார்கள்.
இந்த நேரத்தில் ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ பட வெளியீடு வந்து சேர, ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ண முடியாதளவுக்கு நெருக்கடி கொடுக்கிறதாம் இந்த கூட்டமைப்பு.
இதே படத்தை வேறொரு நிறுவனத்திற்காக நடித்திருந்தால் இந்நேரம் திரைக்கு வந்திருக்குமே என்ற எண்ணம் ஜோதிகாவுக்கு இல்லாமலில்லை.
எப்படியோ, துணிச்சலாக ஒரு தேதியை போட்டு விளம்பரம் கொடுக்கிறார்கள். கல் எந்தப்பக்கத்திலிருந்து வந்து விழப் போகிறதோ?
Friday, August 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment