யாவரும் நலம் , தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதி பகவன் போன்ற படங்களில் நடித்த நீத்து சந்திரா நீண்ட நாட்களுக்குப் பிறகு 'வைகை எக்ஸ்பிரஸ்' படத்தில் ரெட்டை வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து நகுல் ஜெய்தேவ் நடித்து வரும் பிரம்மா.காம் (bramma.com) என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தில் தன்னுடைய நிஜ வாழ்க்கை நீத்து சந்திரா கதாபாத்திரத்திமாகவே நடிகையுள்ளார்.
இதுபற்றி நீத்து சந்திரா கூறுகையில், இது நீளமான கவுரவ வேடம். நான் நானாகவே நடித்துள்ளேன் . நகுலுடன் இணைந்து ஒரு பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு இரண்டு மாதத்திற்கு முன் சென்னையில் நடந்தது. நான் வரக்கூடிய காட்சி அனைத்திலும் புடவைதான் அணிந்துளேன். உண்மையில் சொல்லப்போனால் நான் இதில் அணிந்த புடவைகள் முழுவதும் என்னுடையது. பல பேர் என்னிடம் ஏன் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கேட்கின்றனர். ஹிந்தி படங்களாலும், தியேட்டர் நாடகத்தினாலும் தமிழ் படங்களில் நடிப்பதில் இடையூறு ஏற்படக்கூடாது . அதே சமயம் தமிழ் ரசிகர்களும் என்னை மறந்துவிடக் கூடாது என்பதும் ஒரு காரணம்.
நீத்து சந்திரா ஒரு திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும், நாடக நடிகரும் கூட..
Friday, August 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment