2014 ஆம் ஆண்டு விகாஸ் பாஹி இயக்கத்தில் கங்கனா ரணவத் நடிப்பில் வெளிவந்தது குயின் திரைப்படம். சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம், சிறந்த கதாநாயகி என்று சர்வதேச அளவில் பல விருதுகளையும் குயின் படம் குவித்து தள்ளியது. இப்படத்தை தயாரித்திருந்தார் அனுராக் கஷ்யப்.
தற்போது குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் காஜல் அகர்வால். இதுபற்றி தெரிவித்த காஜல், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் மதுரையில் தொடங்கவுள்ளது. லண்டன், பாரிஸ், அம்ஸ்டர்டம் போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் வெளிவந்த விவேகம் படத்தில் யாழினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். விவேகத்தை தொடர்ந்து காஜல் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் மெர்சல். மெர்சல் படத்தில் நவீன மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் காஜல். விவேகம் திரைப்படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.
விவேகம் படத்தை பற்றி காஜல், யாழினி கதாபாத்திரத்தை மிகவும் நேசித்தேன். நடிகர் அஜித், இயக்குனர் சிவா போன்றவர்களிடம் இணைந்து பணிபுரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். விவேகம் படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நன்கு வரையறுக்கப்பட்டவை. விவேகம் சிறந்து திரைப்படம் என்றும் அவர் குறிப்பிடிருந்தார்.
Monday, August 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment