Sunday, August 6, 2017

ஐஸ்வர்யா ராஜேஷ் செப்டம்பர் 11 அன்று வெளியாகும் தனது இந்தி படமான ‘டேடி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார். துருவ நட்சத்திரம், வடசென்னை போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். சமீபமாக வந்த தகவலின்படி ஜி-ஸ்பாட் என்கிற வலைத்தொடரில் நடித்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்  மற்றும் நெடுஞ்சாலை படத்தின் நாயகன் ஆரி, நடிகை ப்ரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்.

இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், ஜி-ஸ்பாட் வலைத்தொடரில் பெண் சமுக ஆர்வலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த வலைத்தொடர்க்கு ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரின் கருத்து மிக சுவாரஸ்யமான ஒன்று, தற்போது என்னால் அதை முழுமையாக வெளியிட முடியாது. மேலும், வரும் காலங்களில் வலைத் தொடர்கள் தான் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வலைத்தொடர் பற்றி ஆரி கூறுகையில், இது ஷெர்லாக் ஹோல்மேஸ் அடிப்படையாக வைத்து கதை இயற்றப்பட்டுள்ளது. குறும்படங்களை விட வலைத் தொடர்கள் இணையதள பார்வையாளர்களுக்கு சிறந்த தீனியாக இருக்கும். நான் இன்னும் பல வலைத்தொடர்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அது பிற சகநடிகர்களும் நடிக்க முன்வருதற்கு ஒரு காரணமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

பெண்களின் முக்கிய உறுப்புகளின் ஒன்றான ஜி-ஸ்பாட் என்று தலைப்பு வைத்துள்ள வலைத்தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பது ஒரு தைரியமான முயற்சி என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer