இரண்டு வருஷமாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார் பிந்து மாதவி. கேட்டால் “அது என்னோட பர்சனல்” என்றார்.
நடுவுல கிளி ஒதுங்குன கூண்டு எது? ஏன்? என்றெல்லாம் சினிமாவுலகம் அலசி பிழிந்து காயப் போட்டாலும், பிந்து மாதவியின் சினிமா புறக்கணிப்பு அவர்களை கவலைக்குள்ளாக்கியது நிஜம்தான்.
ஏன்? அவர் கடைசியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் சம்பளத்திற்கு அழுத்தம் கொடுத்ததில்லை.
எக்ஸ்ட்ரா பில்களை போட்டு குடைச்சல் கொடுத்ததில்லை.
நடிப்பை ஒரு விளையாட்டு போல செய்து கொண்டிருந்தார்.
அப்படியொரு நல்லுள்ளம், இப்படி நட்டாத்தில் விட்டுவிட்டுப் போனால் வருத்தம் வரதானே செய்யும்?
வெகு காலம் கழித்து பிக் பாஸ் மூலம் தலை காட்டி வரும் பிந்து, வெளியே வரும் போது ஒரு டசன் படமாவது அவருக்காக காத்திருக்கும். நோ டவுட்.
Tuesday, August 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment