தற்போது தமிழ் ஈழம் வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள இந்துக் கட்சியின் காலைப் பிடியுங்கள்! , ஈழத்தில் இருப்பவர்களும் இந்துக்கள் . இந்தியாவில் இருப்பதும் இந்துக்கள் தான். எனவே இதனை பயன்படுத்தி தமிழீழத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற பேச்சு அடிபடுகிறதே உங்களுக்கு தெரியுமா? இருப்பாய் தமிழா நீ நெருப்பாய் என்று வீர வசனங்கள் பேசி. பல போராளிகளுக்கு உணர்ச்சி கவிதைகளை கொட்டி, போருக்கு அனுப்பி. அவர்களை மாவீரர்கள் ஆக்கிவிட்டு, ஐயா காசி ஆனந்தன் அவர்கள் மட்டும் இந்தியாவில் வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டார். உணர்ச்சி கவிஞர் என்று பல தமிழர்களால் போற்றி, சீராட்டி பாராட்டப்பட்ட காசி ஆனந்தன் ஐயாவின் தற்போதைய நிலை, காவி உடை அணிந்த இந்திய, இந்திதித்துவ்வாதிகளின் காலைப் பிடித்துள்ளார்.
அவரது 2 பிள்ளைகளும் மருத்துவர்கள், ஆனால் மண்டப முகாமில் உள்ள ஒரு ஈழத் தமிழனுக்கு இலவச வைத்தியம் பார்த்தார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்கள். இலங்கை குடியுரிமை பெற்ற காசி ஆனந்த ஐயா அவர்கள், இந்தியாவில் எப்படி வீடு வாங்கினார்? வாங்க முடியுமா? பணம் இருந்தால் கூட ஈழத் தமிழர்களால் இந்தியாவில் வீடு வாங்குவது என்பது கஷ்டம். எல்லாம் மத்திய அரசின் மற்றும் 3 எழுத்து(றோ) அட்டம். அதன் கைப் பிடியில் சிக்கியுள்ள காசி ஆனந்தன் ஐயாவை எப்படி ,மீட்ப்பது?
இல்லை என்றால் ரஜனி கூறியது போல, முழுமையாக சந்திர முகியாக மாறும் உன் மனைவியை பார்! பார்! என்று கூறி ஆச்சரியப்படுவதா என்று தெரியவில்லை.
சுற்றி வளைக்காமல் நேரடியாக ஒரு விஷயத்திற்கு வருவோம்.
தமிழீழம் வேண்டுமா?. பிரபாகரன் முகம் வேண்டாம். புலிகளின் படம் வேண்டாம். இனப்படுகொலையான தமிழர்களின் அவல படத்தை காட்ட வேண்டாம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ`இந்து’ என்று சொல்வோம். அதன் பேரில் முன்னும் பின்னுமாக காய் நகர்த்துவோம். பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட இந்தியா, சின்னதாய் ஒரு இந்து தமிழீழத்தை பெற்றுக் கொடுத்து விடும். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சுதந்திரம் கிடைத்துவிடும்.
ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் இப்போது தமிழர்களுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் பால பாடம் இதுதான்.
சமீபத்தில் “தமிழீழம்- இந்திய நட்புறவு மையம்” என்ற அமைப்பின் மூலம் ஒரு கூட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றார், யாருக்கான கூட்டம்? ஏன் இந்த நகர்வு? என்ற கேள்விகளை எல்லாம் கேட்கக்கூடாது. எனென்றால் அவர் இந்தியாவுக்கு நட்புக்கரத்தை நீட்டுகிறார். நல்லது. நட்புக் கரம்தானே முக்கியம். நீட்டிக் கொள்ளட்டும். ஆனால் அங்கே தமிழீழ வரை படம், மட்டுமே இருந்தது. ஒரு பனை மரம்... தலைவரும் இல்லை போராளிகளும் இல்லை, மாவீரர்களும் இல்லை.. ஏன் 2009ம் ஆண்டு போரை நிறுத்தச் சொல்லி தீ குழித்து இறந்தார்களே ஈழப் பற்றாளர்கள். அவர்கள் படங்கள் கூட இல்லை.
ஆக மொத்ததில், இந்திய அரசை திருப்த்திப் படுத்தவும். இந்துக்களின் ஆதரவில் ஈழத்தை அமைக்கலாம் என்றும் தமிழர்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டு திரிய ஆரம்பித்துள்ளார். நமது ஆஸ்தான புலவர். என்ன செய்வது கலாக் கொடுமை.
athirvu.com
Home
»
Tamil Eelam
»
Tamizhagam
»
தமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா? இல்லை காவி முகமா? சமீபத்தில் நடக்கும் திருகு தாளம்!
Monday, August 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment