‘ஒரே டிரஸ்ஸைத் தொடர்ந்து போடமுடியாது. கேரக்டருக்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார் அமலா பால். தனுஷ், அமலா பால், கஜோல் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகம், இன்று ரிலீஸாகியிருக்கிறது. அதை முன்னிட்டு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்த அமலா பால், சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தொடர்ச்சியாகத் தனுஷுடன் நடிப்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அமலா பால், “தனுஷ் திறமைசாலி மட்டுமல்ல, மிகச்சிறந்த கடின உழைப்பாளியும் கூட. தான் மட்டுமல்லாது, உடன் நடிக்கும் நடிகர்களுடன் நன்றாக நடித்தால்தான் காட்சி நன்றாக வருமெனப் புரிந்துகொண்டு, அதற்காக மெனக்கெடுவார். ஒவ்வொரு படத்திலும் அவரிடமிருந்து புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
‘மைனா’ அமலா, இப்படி கிளாமர் அமலாவாக மாறியதற்கான காரணம் கேட்டபோது, “ஒரே மாதிரியாகவே தொடர்ந்து நடிக்க முடியாது. சிறந்த நடிகை என்றால் ஒவ்வொரு படத்துக்கும் நிறைய வித்தியாசம் காண்பிக்க வேண்டும். அதற்கேற்ப என்னையும் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரே டிரஸ்ஸையே தொடர்ந்து போடமுடியாதே…” எனத் தெரிவித்துள்ளார் அமலா பால்.
Friday, August 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment