1961 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா ஒரு அணுகுண்டை வெடித்து சோதனை நடத்தியது. அது ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா வெடித்த இரண்டு அணுகுண்டுகளைக் காட்டிலும் 1500 மடங்கு பெரியது என்றால் அந்த அணுகுண்டின் அளவை புரிந்துகொள்ள முடியும்.
ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோலா தீபகற்பத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
1949ல் அமெரிக்கா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. அதன்பிறகு தொடர்ச்சியாக 80 அணுகுண்டுகளை வெடித்தது. 1958ல் மட்டும் அது 36 அணுகுண்டுகளை வெடித்துள்ளது.
உடனடியாக தீப்பிழம்பு 5 மைல்கள் உயரம் எழுந்தது. அதையொட்டிய காளான் குடை புகை மண்டலம் 64 கிலோமீ்டடர் தூரம் உயர்ந்தது. அந்த குடை 100 கிலோ மீட்டர் நீண்டு விரிந்தது. இந்த குண்டுவெடிப்பை 1000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்தும் பார்க்க முடிந்தது என்கிற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் அணுகுண்டு சோதனையில் யார் முந்துவது என்பதில் போட்டி போட்டுக் கொண்டிருந்தன.
அமெரிக்கா தனது அணுகுண்டை ஹிரோஷிமா மீதும் நாகசாகி மீதும் வெடித்து சோதனை நடத்தியது.
இதற்கு காரணம் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை சில நாட்களுக்கு முன் ஜப்பானின் டோர்பிடோக்கள் தாக்கி அழித்தன.
இதை அறிந்ததும்தான் அமெரிக்கா ஜப்பானை அடக்க இந்த அணுகுண்டுகளை வெடித்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. அதையொட்டியே சோவியத்தின் அணுகுண்டு சோதனைகள் குறித்தும் அது தயார் செய்த மிகப்பெரிய அணுகுண்டு குறித்தும் இப்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
:o
ReplyDelete