Thursday, August 3, 2017

யாழ் கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி, துரத்தி வாளால் வெட்டிய கோஷ்டி தொடர்பாக முதன் முதலில் செய்தி வெளியிட்டது அதிர்வு இணையமே. உடனடியாக அவர்களின் புகைப்படங்களையும் நாம் வெளியிட்டிருந்த நிலையில். கொழும்பில் உள்ள பொலிஸ் மா  அதிபர் ஹெலி மூலமாக உடனடியாக யாழ் சென்று கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

வெளிநாட்டில் இயங்கி வரும் இணையம் ஒன்று செய்திகளை போடுகிறது. புகைப்படங்களை போடுகிறது. ஆனால் உங்களால் அவர்களை கைதுசெய்ய முடியவில்லையா ? என்று சீறி பாய்ந்துள்ளார் டி.ஜி.பி. பின்னர் சில ஊடகவியலாளர்களையும் அவர் சந்தித்துள்ள நிலையில், அதே கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இந்த கொக்குவில் வாள் வெட்டுக்குப் பின்னால் ஒரு கதை உள்ளது என்கிறார்கள். பொதுவாக வாள் வெட்டு கோஷ்டியோடு பொலிசார் ஒட்டி உறவாடுவது வழக்கம் என்கிறார்கள்.

மாமூல் வாங்குவது. சில பெண்களை வாள் வெட்டுக் கோஷ்டியினர் உஷார் படுத்தி பொலிசாருக்கு விருந்து படைப்பதும் வழக்கம். இன் நிலையில், சொன்ன வேலை ஒன்றை செய்யவில்லை என்றும். அது தொடர்பாக பல தடவை சொல்லியும் பொலிசார் கண்டுகொள்ளவில்லை என்றுமே. வாள் வெட்டு பெடியள் கோஷ்டி. ஆத்திரமடைந்துள்ளதாம். இதனால் தனக்கு தெரிந்த பொலிசாரை தான் அவர்கள் தாக்கியும் உள்ளார்கள். அவர்களை கைதுசெய்தால், பெரும் குட்டுகள் உடைந்து உண்மை வெளியே வந்துவிடும் என்று. யாழ் பொலிசார் விடையத்தை அடக்கி வாசிக்க வெளிக்கிட்டார்கள்.

ஆனால் உண்மையை மறைக்க முடியுமா ? அது அதிர்வு போன்ற பல இணையங்களில் முன்னணி செய்தியாக வெளிவர. கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையம் குழம்பிவிட்டது. இதுதான் நடந்த விடையம் ! தற்போது அதிரடிப்படையை இறக்குகிறோம் ஆட்டு குட்டியை இறக்குகிறோம் என்று கூறிவருகிறார்கள். யாழில் 48 மணி நேரத்தில் அனைத்து ரவுடிகளும் கைதாகவேண்டும் என்பது டி.ஜி.பி இன் கடுமையான உத்தரவாம். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer