“தேர்தல்களில் வெற்றிபெறும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைமைகளுக்கு தங்களின் ஆசனம் பறிபோய்விடும் என பெரும் பயம்” என்று வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் அரசியல் போராளியாகவே இருக்க முடியுமே தவிர அரசியல்வாதியாக இருக்க முடியாது. தேர்தல்களில் வெற்றி பெறும் பெண்களை ஓரங்கட்டும் முயற்சிகளை அரசியல் தலைமைகள் மேற்கொள்கின்றன. மௌனமாக இருந்து தலையாட்டும் பெண்களையே அரசியல் தலைமைகளும் விரும்புகின்றன.” என்றுள்ளார்.
Friday, August 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment