வியாழக்கிழமை சென்ட்டிமென்ட் கொண்டவர் அஜீத். அவர் மட்டுமல்ல... அவரை சுற்றியிருப்பவர்களும் இப்போ சாய்பாபா டிவோட்டீஸ் ஆக மாறியிருக்கிறார்கள். சும்மா பேச ஆரம்பித்தால் கூட, ‘சாய்...’ என்று கூறிவிட்டுதான் பேசவே ஆரம்பிக்கிறார் ‘விவேகம்’ டைரக்டர் சிவா.
இந்தப்பழக்கம் எங்கிருந்து வந்தது என்றால், சாட்சாத் சாய் பக்தன் அஜீத்திடமிருந்துதான் என்கிறது தகவல்கள்.
அஜீத்தை சந்தித்தும், அவரிடம் பேசியும் பல வருடங்களை தாண்டிவிட்ட மீடியாவுக்கு, ‘என்னது... அஜீத் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் சாய்... என்று வணங்கிவிட்டுதான் பேசுகிறாரா?’ என்கிற ஆச்சர்யம் வாயை பிளக்க வைக்கிறது.
முனை அறுந்து நிற்கும்போது முன் வந்து கை கொடுப்பது எதுவோ... அதை வணங்குவதும் முழங்குவதும்தானே மனுஷ மனசு? அஜீத் மட்டும் தப்பிக்க முடியுமா என்ன?
Monday, August 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment