இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தின் விளம்பரங்களில் வடிவேலுவின் பர்ஸ்ட் லுக் பலரையும் அதிர விட்டிருக்கிறது. ‘பர்ஸ்ட் லுக்கா அது? பலமுறை பார்த்த லுக்குதான்! இதுல என்னய்யா கிக் இருக்கு?’ என்ற முணுமுணுப்பு நாலாபுறத்திலிருந்தும் வர... கமுக்கமாக சிரித்துக் கொண்டாராம் அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவன்.
முதல் பார்ட் சாயல் இந்த இரண்டாவது பார்ட்டில் இருக்கக் கூடாது என்கிற முனைப்போடுதான் இருக்கிறாராம் அவரும்.
இதுபோக, இந்தப்படத்திற்காக சில பல கிலோ எடை குறைந்திருக்கிறார் வடிவேலு.
வழக்கம் போல தனது நிலை புரியாமல் ஜோடி போட ஆசைப்படும் வலுவிழந்த இந்த வைகைப் புயல், ஒரு டசன் நடிகைகளின் பெயர்களை கொடுத்து, சோடியா இதுல ஒண்ணைப் போடுங்க என்று கூற, அந்த லிஸ்ட்டில் ஒருவர் கூட யெஸ் சொல்லவில்லை என்பதுதான் கொடுமை.
கட்ட கடைசியாக பார்வதி ஓமனக்குட்டன் சம்மதித்திருக்கிறார். சோடிப் பொருத்தம் அப்படி!
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment