Tuesday, August 22, 2017

2017ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம் திகதி(அடுத்த மாதம்)  அன்று, பூமிக்கு மிக அருகில் திடீரென ஒரு ஏலியன் கிரகம் தோன்றவுள்ளதாகவும். அதன் பெயர் நிபிரு என்றும் பல மில்லியன் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அது பூமியின் அழிவைக் குறிக்கும் நாள் என்று சிலரும். பூமி முற்றாக அழிந்துவிடும் என்று சிலரும். பெரும் அழிவை சந்தித்தாலும் மனித குலம் உயிர் வாழும் என்று , மேலும் சில கிறீஸ்தவர்கள் நம்புகிறார்கள். உண்மையில் அப்படி நடக்க எந்த ஒரு சான்றும் இல்லை. இது வெறும் கற்பனை என்று நாசா விஞ்ஞானிகள் இதனை மறுத்துள்ளார்கள்.

இருப்பினும் நேற்று இடம்பெற்ற சந்திர கிரகணம் ஊடாக, ஒரு ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறி குறித்த கிறீஸ்தவ வட்டாரத்தினர் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளார்கள். சில தரவுகளை காட்டி, நிபுரு என்னும் இக் கிரகம் பூமியோடு மோதவுள்ளதாக அவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். இதில் விநோதமான விடையம் என்னவென்றால். 21ம் திகதி இடம்பெற்ற சந்திர கிரகணத்தில் அமெரிக்காவின் சில பகுதிகள் முற்றாக இருள் சூழும் என்று முதல் முதல் கூறியவர்கள் இவர்கள் தான். அப்போது அதனை விஞ்ஞானிகள் ஏற்க்க மறுத்தார்கள். ஆனால் நடந்துவிட்டது. இபொழுதும் இவர்கள் சில கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அது நடந்துவிடுமா என்பது தான் பலருக்கு சந்தேகமாக உள்ளது.

தற்போதும் இவர்கள் கூறுகிறார்கள், ஒரு வேற்று கிரகவாசிகளின் கோள் ஒன்று. பூமியோடு திடீரென வந்து மோதும் என்று. ஆனால் பரந்து எல்லைகளே இல்லாத இந்த அண்டவெளியை "ஸ்கேன் "செய்து பார்த்து. அப்படி எந்த ஒரு கிரகமும் பூமிக்கு அருகில் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். ஆனால் அவர்களால் எவ்வளவு தூரம் வரை ஸ்கேன் செய்ய முடியும் என்பது ஒரு கேள்விக் குறி தான். ஒளியின் வேகத்தில் ஒரு கோள் பயணித்தால், அதனை ஸ்கேன் செய்து பார்க்கவும் முடியாது. அத்தோடு அது 3 நாட்களில் பூமிக்கு அருகில் வந்து சேர்ந்தும் விடும். பூமிக்கும் மனித குலத்திற்கும் ஆபத்து என்பது , விண்ணில் இருந்து தான் வருமே ஒளிய , மனிதர்களால் அல்ல என்பதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

எத்தனை அணு குண்டுகளை போட்டாலும் , உலகத்தை சுக்கு நூறாக உடைக்க முடியாது என்பது உண்மை. ஆனால் அதேவேளை வேறு கிரகம்(கோள்) பூமியோடு மோதினால் பூமி உடையும். அத்தோடு பூமி சுற்றுவது சற்றேனும் குறைந்தால் உடனே புவி ஈர்ப்பு குறையும். இல்லையேல் புவி ஈர்ப்பு விசை முற்றாக இல்லாமல் போகும். அப்படி நடந்தால் காற்று முதல் கொண்டு பூமியில் உள்ள கடல் அதன் நீர் அனைத்துமே அப்படியே மிதந்து விண்வெளியில் செல்லும். பூமியில் உள்ள காற்றின் அழுத்தம் சடுதியாக குறையும். இதனால் மனிதர்கள் தொடக்கம் அனைத்து ஜீவராசிகளும் உடல் அழுத்தம் குறைந்து இறந்து போவார்கள். இது தான் சடுதியாக நடக்கும் ஒரு விடையமாக இருக்கும். அப்படி நடக்குமேயானால்,

லண்டன் பிக் பென்,  அமெரிக்காவின் லிபேட்டி சிலை என்பன சந்திரனில் போய் விழ்ந்துவிட வாய்ப்புகள் கூட உள்ளது. ஒரு செக்கனில் உலகம் அழியும். இதனை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மீண்டும் பல மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும்,பூமி மீண்டு வர.  பூமி சூரிய ஈர்ப்பு விசயால் சுழல ஆரம்பிக்க. பின்னர் தூசிப் படங்கள் கற்கள், அருகில் உள்ள நீர் , காற்று என்பன மீண்டும் பூமியில் சேரும். அப்போது ஒரு வகையான உயிரினம் உருவாகும். அதேவகையான  முன்னர் இருந்த அதே கனிமப் படிவுகள் பூமியில் சிலவேளைகளில் இருக்காது. காரணம் பூமியோடு மோதிய வேற்றுக் கிரகத்தின் கனிமப் படிவங்களும் கலந்திருக்கும். எனவே அப்போது உருவாகும் உயிரினங்கள் மிகவும் வேறுபட்டவையாக இருக்கும். மனிதன் என்று ஒருவன் வாழ்ந்தான், செத்து அழிந்தான் என்ற தடையம் கூட மிஞ்சாது. ஆனால் பாருங்கள் இந்த இடைவெளிக்குள்,

*சிங்களவனுக்கு தமிழனை அழிக்க ஆசை !
*முஸ்லீம்களுக்கு கிறீஸ்தவர்களை அழிக்க ஆசை !
*மனிதர்களுக்கு பணம் மேல் ஆசை ! பணம் உள்ளவர்களுக்கு அதிர்காரத்தின் மேல் ஆசை !
*நாடுகள் மற்றைய நாட்டை பிடிக்க ஆசை ! எல்லையில் ஆசை,
*போட்டி புறாமைமேல் ஆசை, ! காமம் மேல் ஆசை !
*கள்ள காதல் மேல் ஆசை ,  மதத்தின் மேல் ஆசை ! , அல்லா , சிவன் , கிறீஸ்து மேல் ஆசை !
*ஒருவரை ஒருவர் கொல்வதிலும் ஆசை ! நகை மேல் ஆசை, நவரத்தினங்கள் மேல் ஆசை !

யாருமே இல்லாதா ஒரு பரந்த விண்வெளியில். எங்கோ ஒரு மூலையில் தனியாக பூமி என்னும் ஒரு சிறிய கிரகத்தில் நாம் அடைபட்டு இருக்கிறோம். பூமி என்பது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை ஆகும். மேலே போனால் இறந்துவிடுவோம். கீழே போனாலும் இறந்துவிடுவோம், என்பது தான் யதார்த்தம். இதனை புரிந்துகொண்டால் மனிதர்கள் நன்றாக வாழ கற்றுக்கொள்வார்கள்.

ஒருவரோடு ஒருவர் அன்பாக, இருந்து, காதல் கொண்டு, வாழ்ந்தால் அது தான் சொர்க்கம்.. என்று அனைவரு நினைத்தால் , இந்த பூமியும் ஒரு சொர்கம் தான்.

அதிர்வு.

0 comments :

Post a Comment

 
Toggle Footer