நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடலை பற்றி நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து விஜய் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் தனது டுவிட்டரில் 'சுறா' திரைப்படம் குறித்த தமது விமர்சனத்தை தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள், தன்யாவை பத்திரிகைகளில் அச்சிட முடியாத கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினர். இதனால், கொதித்தெழுந்த தன்யா இந்த விவகாரத்தில் விஜய் தலையிட வேண்டும் எனக் கூறினார். அதேபோல், தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை கூறி விஜய் அறிக்கை வெளியிட்டார். இதன் தாக்கம் குறையும் முன் தற்போது நடிகை கஸ்தூரி அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் ஆடியோ இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் பாடல் எப்படியிருக்கிறது என ஒரு ரசிகர், கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கஸ்தூரி ' பாடலைக் கேட்டேன். உண்மைய சொன்னா விஜய் ரசிகர்கள் எனக்கும் ஹேஸ்டேக் ஆரம்பிப்பீங்களோ?. விஜய் மற்றும் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து நான் நிறைய எதிர்பார்த்தேன்' என பதில் கூறியுள்ளார்.
கஸ்தூரியின் இந்த பதில் டிவிட்டரில் விஜய் ரசிகர்களுக்கும், அவருக்கும் இடையே மோதலை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
Sunday, August 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment