மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான றொட்னி பிறீலிங்குசன், ஹென்றி கியூலர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இதன்போது, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் நீடிக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு ஒன்றை எட்ட முடியாத சந்தர்ப்பத்தில் இன்னும் அதிகளவான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவார்கள்.
முடிந்தளவுக்கு அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் சம்மதத்துடன் ஒரு புதிய அரசியலமைப்பினை உருவாக்கி தேசியப் பிரச்சினைக்கு முடிவுகாண அரசாங்கம் முன்வர வேண்டும்.
அத்தோடு, காணாமல் போனோர் அலுவலக சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.” என்றும் எடுத்துக் கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது: சம்பந்தன்
Friday, August 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment