Monday, August 21, 2017

சென்னை வளசரவாக்கத்தில் திருமண தகவல் மையத்தில் தம்பதிகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர். குரோம்பேட்டை, நியூ காலனியை சேர்ந்தவர் சிவபாலன் (எ) கதிரேசன் (49), இவர் வளசரவாக்கம் பகுதியில் திருமண தகவல் மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் கடந்த சில மாதங்களாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகளான பன்னீர்செல்வம், மோகனப்ரியா ஆகிய இரண்டு பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சிவபாலன் சம்பளம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், தம்பதிகள் தங்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்று சிவபாலனிடம் கேட்டுள்ளனர். அதற்கு சிவபாலன் செக்கை கொடுத்து வங்கியில் பணமாக எடுத்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் உள்ள வங்கியில் செக்கை மாற்றி பணம் எடுக்க சென்றபோது சிவபாலன் கணக்கில் பணம் இல்லை என்று மோகனப்ரியாவுக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக சிவபாலனிடம் மோகனப்ரியா கேட்டபோது, நீயும், உன்னோட கணவனும் உல்லாசமாக இருக்கும் காட்சி என்னிடம் உள்ளது. எனவே அடிக்கடி சம்பளம் கேட்டு தொல்லை செய்தால் இதனை இணையத்தில் போட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன தம்பதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில்புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் சிவபாலனை போலீசார் கைது செய்து அவரது திருமண தகவல் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

அதில் திருமண மையத்தில் தம்பதிகள் இருவரும் தங்கியிருந்த அறையில் சிவபாலன் கேமரா வைத்து அவர்களின் அந்தரங்க காட்சிகளை படம் பிடித்து வைத்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் சிவபாலனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer