ஓவியாவுக்கு உலகம் முழுக்க ரசிகர் மன்றங்கள் முளைத்துவிட்டன. அண்மையில் இலங்கையில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஓவியா புகழ் பாடி விட்டார்கள்.
இந்த நேரத்தில் அவரது படம் ஏதாவது வர வேண்டுமே? யெஸ்... ஓவியா நடித்து உள்ளேயே(?) இருந்த ‘சீனு’ என்கிற படத்தை தூசு தட்டி எடுத்துவிட்டார்கள்.
படத்திற்கு ‘ஓவியாவ விட்டா யாரு இருக்கா சீனு?’ என்று பெயர் மாற்றிவிட்டார்கள்.
(உங்க சாதுர்யத்துல சந்தன மழை பொழிய...) நமக்கு இப்போ இருக்கிற வேற லெவல் மாஸ், இந்தப்படத்தால் கெட்டாலும் சரி.
சீனு குடும்பத்திற்கு ஹெல்ப் பண்ணனும் என்று முடிவெடுத்துவிட்டாராம் ஓவியா.
கேரளாவிலிருந்து இப்படத்தின் தயாரிப்பாளர் மதுரை செல்வத்தை தொடர்பு கொண்டவர், “ரிலீஸ் நேரத்தில் சொல்லுங்க.
நான் நேர்ல வந்து புரமோஷன்ல கலந்துக்குறேன். நீங்க ஜெயிக்கணும். கஷ்டப்படக்கூடாது” என்றாராம்.
சொல்லும்போதே மெல்ட் ஆகிறார் செல்வம். ஓவியாவோட இந்த வெள்ளை மனசுக்குதான் நாடே நலங்கு வைக்குது போல...!
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment