வடக்கு- கிழக்கில் வீடுகளை இல்லாதோர் மற்றும் இழந்தோருக்காக 50,000 கல் வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்பிரகாரம், வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கோரப்படவுள்ளன.
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு தலைமையில் ஏனைய சில இணைச்சுக்கள் இணைந்து இந்த வீட்டுத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால், குறித்த வீடுகளுக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த வீடுகளை அமைக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு- கிழக்கில் 60,000 பொருத்து வீடுகளை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், பொருத்து வீடுகள் வடக்கு- கிழக்கின் வானிலைக்கு பொருத்தமில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்படும் என்று நம்பப்பட்டது. ஆனாலும், 6000 பொருத்து வீடுகளையாவது அமைத்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையிலேயே, 50,000 கல் வீடுகளை அமைப்பதற்கான புதிய அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
Monday, August 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment