Wednesday, August 30, 2017

மகா­லிங்கம் சசிக்­குமார் அல்­லது சுவிஸ்­குமார் 2015.05.08 திக­தியில் இருந்து 2015.05.12 ஆம் திகதி வரை என்­னு­டனேயே கொழும்பில் ஏஞ்சல் லொட்ஜில் தங்கியிருந்தார். எங்­க­ளுக்­கி­டை­யி­லான குடும்ப உறவு நன்­றா­கவே இருந்­தது என சுவிஸ்­கு­மாரின் மனை­வி­யான மகா­லக்ஷ்மி வித்­தியா படு­கொலை வழக்கின் ட்ரய­ல் அட்பார் நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணையில் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

குறித்த மாண­வியின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மை­யி­லான அன்­ன­லிங்கம் பிரே­ம்­சங்கர், மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகியோர் அடங்­கிய ட்ரய­ல்அட்பார் நீதாய விளக்க நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.

இவ்­வ­ழக்கில் வழக்குத் தொடு­நர்­த­ரப்பு சாட்சிப் பதி­வுகள் நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தொடர் வழக்கு விசா­ர­ணையின் பதி­னைந்­தா­வது நாளாக எதி­ரிகள் தரப்பு சாட்சிப் பதி­விற்­காக மன்று கூடி­யி­ருந்­தது. இதன்­படி இவ்­வ­ழக்கின் ஒன்­ப­தா­வது எதி­ரி­யான மகா­லிங்கம் சசிக்­குமார் சார்பில் அவ­ரது மனை­வி­யான சசிக்­குமார் மகா­லக்ஷ்மி சாட்­சியம் வழங்க அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இவர் சாட்­சிக்­கூண்டில் நின்று சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து தனது சாட்­சி­யத்தை வழங்­கி­யி­ருந்தார்.

இவ­ரது சாட்­சி­யத்தை ஒன்­ப­தா­வது எதிரி சார்பு சட்­டத்­த­ர­ணி­யான சின்­னையா கேதீஸ்­வரன் நெறிப்­ப­டுத்­தும்­போது அவர் அளித்த சாட்­சி­யத்தில், நான் சசிக்­கு­மாரை 2012 ஆம் ஆண்டு திரு­மணம் செய்­தி­ருந்தேன். அவர் வரு­டத்­திற்கு ஒரு முறை நாட்­டிற்கு வருவார். அந்­த­வ­கையில் 2015 ஆம் ஆண்டு நான்காம் மாதம் ஐந்தாம் திகதி இலங்கை வந்­தி­ருந்தார்.

அவ்­வாறு வந்­தவர் ஐந்­தாம்­மாதம் ஏழாம் திகதி திரும்பி சுவி­ட்ஸர்­லாந்து போக இருந்தும் ஆனால் போயி­ருக்­க­வில்லை. அவர் 2015.05.08 திக­தியில் இருந்து 2015.05.12 ஆம் திகதி வரை என்­னு­ட­னேயே வெள்ளவத்தை ஏஞ்சல் லொட்ஜில் தங்­கி­யி­ருந்தார். அச்­ச­ம­யத்தில் எங்­க­ளுடன் சசிந்­திரன் துசாந்தன் சுவிஸ்­கரன் ஆகி­யோரும் இருந்­தார்கள் என்றார். இதனைத் தொடர்ந்து இவ­ரது சாட்­சி­யத்தை சட்­டமா அதிபர் திணைக்­கள பிர­தி­சொ­லி­சிட்டர் ஜென்ரல் குமார்­ரட்ணம் குறுக்கு விசா­ரணை செய்­யும்­போது, சசிக்­குமார் 2015.05.08 இலி­ருந்து 2015.05.12 ஆம் திக­தி­வரை தன்­னு­ட­னேயே இருந்தார் என அவ­ரது மனைவி சாட்­சி­ய­ம­ளித்தார்.


இதன்­போது பிர­தி­சொ­லி­சிட்டர் ஜெனரல் அதற்கு சாட்­சியம் ஏதும் இருக்­கின்­றதா என வின­வி­ய­போது அதற்கு சாட்­சியம் எதுவும் இல்லை எனவும் அவர் சாட்­சி­ய­ளித்­தி­ருந்தார். இதனைத் தொடர்ந்து குறித்த சாட்­சியை 9 ஆவது எதிர்­சார்பு சட்­டத்­த­ரணி மீள் விசா­ரணை செய்­யும்­போது, தனக்கும் தனது கண­வ­ருக்கும் இடையில் நல்ல சந்­தோ­ச­மான உறவே காணப்­பட்­டி­ருந்­த­தாக சசிக்­கு­மாரின் மனை­வி­யான மகா­லக்ஷ்மி சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை இவ்­வ­ழக்கில் ஐந்தாம் எதி­ரி­சார்­பாக சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு சட்ட வைத்­திய அதி­காரி மயூ­ரதன் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். அவ­ரிடம் 5 ஆம் எதிரி சார்பு சட்­டத்­த­ர­ணி­யான ரகு­பதி 5 ஆம் எதி­ரியை பரி­சோ­தனை செய்யும் போது அவ­ரிடம் ஏதா­வது உரை­யா­டி­னீரா எனக் கேட்­கப்­பட்­டது. அதற்கு சாட்சி சாதா­ர­ண­மாக எம்­மிடம் பரி­சோ­த­னைக்காக வரு­ப­வர்­க­ளிடம் உரை­யா­டு­வ­தைபோன்றே அவ­ரு­டனும் உரை­யா­டி­யி­ருந்தேன் என சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். இதே­போன்று 7ஆம் எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தான் 2015.05.12 ஆம் திகதி கொழும்பில் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை எங்­கெங்கே இருந்தேன் என சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

எனினும் அவர் கூறிய அவ்­வி­ட­யங்கள் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவின் குறித்த எதி­ரியின் வாக்­கு­மூ­லத்தில் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. இது தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் உத­விப்­பொலிஸ் அத்­தி­யட்­சகர் திஷேரா வாக்­கு­மூலம் தொடர்பில் மறு­த­லிப்பு சாட்சியம் வழங்குவதற்காக மன்றிற்கு அழைக்கப்பட்டு அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இதன் படி அவரது சாட்சியத்தில் 7 ஆம் எதிரி குறிப்பிடுவது போன்று 12 ஆம் திகதி காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அவர் எங்கெங்கு இருந்தார் என்று விசேடமாக குறிப்பிட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட வில்லை என வாக்குமூல பதிவேட்டு புத்தகத்தைப் பார்த்து சாட்சியமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer