Tuesday, August 29, 2017

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படு வதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சிறு வார்த்தை கள் கூட பெரிய தகராறில் போய் முடியும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில்  வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண முயற்சி கள் பலிதமாகும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.


மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள்  அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதி காரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கை யாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.    
   
சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல் கள் வந்துப் போகும். அநா வசியச் செலவுகளை கட்டுப் படுத்துவீர்கள்.  நவீன சாதனங்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும்  நாள்.  

கன்னி: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதா யம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி கள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த தயக்கம், தடுமாற்றம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள்  நண்பர்களாவார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.  புது அத்தியாயம் தொடங்கும் நாள்.    

விருச்சிகம்:  ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். உதவி கேட்டு தொந்தரவு கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர் கள். உத்யோகத்தில் மறதியால்  பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.  

தனுசு: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு  பேசாதீர்கள். அரசுகாரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும்  நாள்.  

மகரம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். சகோ தரங்களால் பயனடைவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.  

கும்பம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர் கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியா பாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.  சாதித்துக் காட்டும் நாள்.            

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர் களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer