Saturday, August 26, 2017

மேஷம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங் களால் அலைச்சல் இருந்தா லும் ஆதாயமும் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக் கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

கன்னி: காலை 6.07 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர் வதால் வீண் டென்ஷன் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அழகு, இளமைக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர் கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

துலாம்: காலை 6.07 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை களை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சகோதரங்கள் பாசமழை பொழி வார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.  உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மகரம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர் கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்: காலை 6.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண் டாம். நண்பகல் முதல் மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மீனம்: காலை 6.07 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் மறதியால் பிரச்னை கள் வந்து நீங்கும். குடும்பத் தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உடல் நலம் பாதிக்கும். அசைவ உணவு களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக் கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer