Saturday, August 19, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அனைத்து சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளுக்கமைய சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டமூலம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer