Sunday, August 20, 2017

மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந் தவர்கள் பாசமழைப் பொழி வார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. வெற்றி பெறும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வராது என்றிருந்த பணம் வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. குடும்பத் தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

சிம்மம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உறவினர்கள் ஒத்துழைப் பார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வாகன பழுது நீங்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. நிம்மதி கிட்டும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச் சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். போராட்டமான நாள்.

மகரம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலித மாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமை களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer