Sunday, July 9, 2017

ஒரு சிம்பு செய்தி. பல வருஷங்களுக்கு முன் ‘கெட்டவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார் அவர். வழக்கம் போல சிம்பு ஃபார்முலா அங்கும் அரங்கேற, படத்தின் தயாரிப்பாளர் திருச்சியிலேயே பெரிய கை! ஜாதி சங்கத் தலைவர் வேறு.

தன் பாணியில் சிம்புவை டீல் பண்ணினார். அதாவது... தம்பி, நாளைக்கும் ஷுட்டிங் வராம அல்வா கொடுத்துதேன்னா மூஞ்சில ஆசிட் ஊத்திடுவேன் என்றார். அது மட்டுமல்ல, அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருவதையும் அறிந்தாராம் சிம்பு.

அதற்கப்புறமும் படத்தை தொடர சிம்புவின் அப்பா என்ன ஒன்றும் தெரியாதவரா?  எடுத்த வரைக்குமான செலவை தருவதாக ஒப்புக் கொண்டு பிலிமை வாங்கிக் கொண்டார் டி.ஆர்.

அந்தப்படத்தின் எடிட் செய்யப்பட்ட பகுதியே 45 சதவீதம் இருக்கிறதாம். மிச்சத்தை ஒப்பேற்றி இன்னொரு படத்தை வெளியிட்டுவிடலாமா என்கிற யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த 55 பர்சென்ட் படத்துக்கு சிம்பு  ஒத்துழைக்கணுமே, அதுவல்லவோ முக்கியம்?

0 comments :

Post a Comment

 
Toggle Footer