முதுபெரும் இயக்குனர் மற்றும் நடிகர் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், சமுக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமியின் சுயசரிதை படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் இயக்குனராக எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளரான விஜய் விக்ரம் இயக்கவுள்ளார்.
இதைப்பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், ‘நான் இயக்குனராக அறிமுகமான காலம் முதல் சமூகம் சார்ந்த கதைகள் தான் எடுத்துவருகிறேன். என்னுடைய அனைத்து படங்களும் சமூக பிரச்சனைகளை சார்ந்துதான் இருக்கும். அதனால் பல தடைகளும் எனக்கு வந்ததுண்டு. மூன்று மாதங்களுக்கு முன்னர் டிராபிக் ராமசாமின் வாழ்க்கையைப் பற்றி எனக்கு தெரியவந்தது. எப்படி ஒரு மனிதர் இவ்வளவு துணிச்சலோடு செயல்படுகிறார் என்றும், எப்படி பெரிய அரசியல்வாதிகள், கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது இவ்வளவு வழக்குகளை பதிவுசெய்திருக்கிறார் என்றும் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இந்த முதிர்ந்த வயதில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் செயல்படுகிறார்.
சமூகத்திற்காக போராடியதற்கு பலனாக அவருடன் உடன் பிறந்த 10 சகோதரர்களும், அவருடைய மனைவியும் பிரிந்து சென்றுவிட்டனர். பலமுறை காவல்துறையினரால் தாக்கப்பட்டும் இன்னமும் மன உறுதியோடு போராடிகொண்டிருப்பவர். இதைப்பற்றி தயாரிப்பாளர் பாஸ்கர் என்னுடன் ஆலோசனை நடத்தினார். என்னை இப்படத்தை இயக்கி, டிராபிக் ராமசாமியாக நடிக்கச் சொன்னார். பிறகு நான் இந்த வயதில் படம் இயக்க முடியாது எனச்சொல்லி, டிராபிக் ராமசாமியாக நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்று எஸ்.ஏ.சந்திரசேகர் குறிப்பிடிருந்தார்.
Wednesday, July 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment