இனிமேல்தான் இருக்கு தமிழ்சினிமாவின் கற்பனை வளம். முன்பெல்லாம் ஒரு படத்திற்கு தலைப்பு வைக்க ஆயிரம் முறை மண்டையை கசக்கிக் கொள்வார்கள்.
அதனால்தான் பழைய தலைப்புகளையே பக்குவமாக பேசி மீண்டும் ரீமேக் அடிக்கும் வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.
இனி எந்தப்படத்திற்கும் வரி விலக்கு இல்லை என்றாகிவிட்டதல்லவா? இனிமேல் தமிழ் படங்களில் நிறைய ஆங்கில தலைப்பு வரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பவே ‘எக்ஸ் வீடியோஸ்’ என்றொரு தமிழ் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் டெர்மினேட்டர், ஆர்மி ஆஃப் கார்ட் என்றெல்லாம் யோசிக்கிறார்களாம்.
அட... இப்ப கூட சொந்தமா யோசிக்க மாட்டாங்களோ?
Tuesday, July 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment