“தமிழர்களுக்கு ஒரு தீர்வும், விடிவும் கிடைக்கின்ற போது, அது முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான விடுதலையாகவும், விடிவுமாக அமையும். தமிழர்களின் உரிமைக்காக மட்டும் நாங்கள் குரல் கொடுக்கவில்லை. முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் எமது போராட்டங்கள் நடந்திருக்கின்றன.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வாவின் காலத்திலிருந்து தமிழ் மக்களோடு பல போராட்டங்களில் பங்களிப்பு செய்து வந்த முஸ்லிம்கள், தமிழர்களின் இறைமை, சுயநிர்ணய உரிமைகளுக்காக இடம்பெற்ற ஜனநாயக, ஆயுதப் போராட்டங்களிலும் அர்ப்பணிப்பு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமின் 50 வருட கால ஊடகப் பணியை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 'பொன்விழாக்காணும் சலீம்' எனும் தலைப்பில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் போது, அது முஸ்லிம்களின் விடுதலையாகவும் இருக்கும்: மாவை சேனாதிராஜா
Wednesday, July 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment