Wednesday, July 26, 2017

இளஞ்செழியனை நோக்கி சுட்ட நபர் தற்போது கைதாகியுள்ள நிலையில். அவரது புகைப்படமும் அதிர்வு புலனாய்வு நிருபர் ஊடாகப் பெறப்பட்டுள்ளது. இவர் பொலிசாரிடம் தெரிவித்த கருத்து பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. நலூர் கோவில் பகுதியில் நாம் மது போதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் அங்கே வந்தார். அப்ப தான் நீதிபதி இளஞ்செழியன் அவரது கார் வந்தது.

அங்கே என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க அவர்கள் முனந்தார்கள். அந்த வேளை சும்மா பிஸ்டலை தட்டிப் பறித்தேன். அது தவறுதலாக சுட்டுவிட்டது என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஆக மொத்ததில் பந்தையத்தில் அவர் ஜெயிச்சிட்டாராம் ! இதற்கு தான் சிலர் கட்டுரை எல்லாம் எழுதினார்கள் தெரியுமா ... இளஞ்செழியன் மீது ஒரு சன்னம் பட்டிருந்தால் .... பெரும் பூகம்பம் வெடித்திருக்கும் என்றும் சிங்களத்தை நாம் எச்சரிக்கிறேம் என்று கட்டுரை எழுதி தள்ளினார்கள் சிலர்.

இது அமெரிக்கா மற்றும் ரஷ்டாவின் திட்ட மிடப்பட்ட ஒரு சதி என்று யாரும் கட்டுரை எழுதவில்லை. கொஞ்சம் விட்டிருந்தால் கட்டுரை எழுதி இருப்பார்கள். இதனை ஆய்வு செய்திருப்பார்கள். பல கோணங்களில் பார்பதாக சொல்லி தமிழர்களை குழப்பி இருப்பார்கள். நல்லவேளை குற்றவாளியே தான் என்ன செய்தேன் என்பதனை ஒப்புக்கொண்டு விட்டார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer