Tuesday, July 25, 2017

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டிஆர்பி அதிகரிக்க காரணமே, யாரை எலிமினேட் செய்வது, யாரை வைத்திருப்பது என்பதை தீர்மானிக்க நடைபெற்ற பார்வையாளர் வாக்களிப்புதான்.

ஆனால் அடுத்த வாரத்திலிருந்து பிக்பாஸ் வீட்டுக்குள் யாரை வெளியேற்றுவது என்பதையும், யாரை வைத்திருப்பது என்பதையும் முடிவெடுக்கும் அதிகாரத்தை பிக்பாஸ் கமல்ஹாசனே கையில் எடுத்துக் கொள்ளப்போகிறாராம்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நமீதாவை வெளியேற்றும் அறிவிப்பை வெளியிட்ட கமல், இதை தெரிவித்திருக்கிறார்.

பார்வையாளர் பங்களிப்பை தவிர்க்க முடிவெடுத்தது ஏன் என்பதற்கு காரணம் எதையும் அவர் கூறவில்லை.

ஆனால், ஓவியாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் நடக்கும் விவாதங்களும், பிக்பாஸ் வீட்டில் இருப்போர் குறித்த கடுமையான விமர்சனங்களும் புதிய முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பார்வையாளர்கள் தங்களை கவர்ந்தவர்களை காப்பாற்றவும், தங்களுக்கு பிடிக்காதவர்களை வெளியேற்றவும் கிடைத்த வாய்ப்பை இழந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் கமல் நினைத்தாலோ, அல்லது பிக்பாஸ் ஸ்பான்ஸர்கள் நினைத்தாலோ ஓவியாவை நிகழ்ச்சியிலிருந்து தூக்கிவிட முடியும். பார்வையாளர்களுக்கு எரிச்சலூட்டும் காயத்ரி, ஜூலி, சக்தி போன்றவர்களை தொடர்ந்து உள்ளே வைத்து காப்பாற்ற முடியும்.

இப்படி ஒரு சாரார் நினைத்தாலும், இதுவரை நடந்த வாக்கெடுப்பே போலியாக இருக்கக்கூடாதா? என்ற சந்தேகத்தையும் இன்னொரு சாரார் எழுப்புகிறார்கள்.

ஒன்னரைக்கோடிப் பேர் வாக்களித்தார்கள், இரண்டு கோடிப் பேர் வாக்களித்தார்கள் என்று கமல் கூறியது உண்மையாக இருக்குமா?

நிகழ்ச்சியின் ஸ்பான்ஸர்கள் அளந்துவிடும் கதையை கமல் வாசித்திருக்கக்கூடாதா?

இப்படியும் சில சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.

இரண்டுவாரம் வாக்களிப்பு இல்லாமல் நடத்துவார்கள். பிறகு, பார்வையாளர்களின் கருத்துக்களை மதித்து, வாக்களிப்பு முறையை மீண்டும் கொண்டு வருவதாக கூறுவார்கள்...

அவர்கள் வச்சா குடுமி, அவர் அடித்தால் மொட்டை.!

-விமர்சகன்

0 comments :

Post a Comment

 
Toggle Footer