வியாழக்கிழமை காலமான சீன மனித உரிமைகள் போராளியான லியு சியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது சீனாவின் நன் மதிப்பீடுகள் அல்லது இறையாண்மையை மதிக்காத செயல் மட்டுமல்லாது நோபல் பரிசின் கௌரவத்துக்கே பங்கம் விளைவித்த செயல் (blashpemy) என சீனா இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இத்தகவலை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கெங் சுவாங் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். 2010 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற லியு சீனாவில் ஜனநாயகத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுடன் அதனால் பல முறை சிறைக்கும் சென்று வந்தவர் ஆவார். இதனால் சீனாவில் மனித உரிமைகளை வென்றெடுப்பதற்கான செயலில் முதன்மையான நிலையில் இருப்பதாக இவர் பார்க்கப் பட்டார். 61 வயதாகும் இவர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப் பட்டு சிகிச்சைப் பலனின்றி நேற்று வியாழக்கிழமை காலமானார்.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் லியுவின் மறைவுக்குத் தமது அனுதாபங்களைப் பதிவு செய்துள்ள நிலையில் 2010 இல் இருந்து வீட்டுக் காவலில் இருக்கும் லியுவின் மனைவியான லியு சியா விடுவிக்கப் பட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தெரிய வருகின்றது. சர்வதேசம் மௌனமான நிலையில் ஒரு சில நாடுகள் அனுதாபங்களைப் பதிவு செய்து வரும் நிலையில் சீன அரசால் லியுவுக்கு எதிராக சில ஆர்ப்பாட்டப் பேரணிகள் ஒழுங்கு செய்யப் பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
காலம் சென்ற லியு-இற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது அதன் கௌரவத்துக்குப் பங்கம் விளைவித்த செயல்: சீனா
Saturday, July 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment