Thursday, July 20, 2017

அண்மையில் துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துப்பறிவாளன் படத்தின் இயக்குனர் மிஷ்கின், நாயகன் விஷால், படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வரக்கூடிய நடிகை சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் பேசிய துப்பறிவாளன் படத்தின் விநியோகஸ்தர் மெட்ராஸ் என்டேர்ப்ரிசெஸ் எஸ்.நந்தகோபால், நடிகர் விஷால் ஒரு சிறந்த மனிதர் என்றும் இன்னும் கல்யாணம் கூட செய்யாமல் காமராஜரைப் போல் வாழ்கிறார் என்றும் நகைச்சுவையோடு பேசினார்.

படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் பேசி முடித்த பிறகு, நடிகர் விஷால் பேசத் தொடங்கினார். அவர் கூறியதாவது, எனக்கு ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக துப்பறிவாளன் படம் மிகப்பெரிய ஊக்கம் தரும் என்று நம்புகிறேன். என்னுடைய வாழ்கையின் பொக்கிஷமாக நினைக்கக்கூடிய சொத்தாக மிஷ்கின் எனக்கு கிடைத்திருக்கிறார். இப்படத்தில் முக்கியமாக 7 வியட்நாம் சண்டையாளர்கள் உடனான சண்டைக்காட்சி சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.

படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரக்கூடிய பிரசன்னா, நாங்கள் இருவருமே சிம்ரனின் மிகப்பெரிய ரசிகர்கள். இன்று சிம்ரனுடன் இணைந்து நடிப்பதற்கு பெருமைப்படுகிறோம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய விஷால், அடுத்து நடக்கவிருக்கும் துப்பறிவாளன் இசை வெளியீட்டு விழாவில் அந்த அன்புள்ள மக்களை ( tamilrockers ) உங்கள் முன்னால் அறிமுகப்படுத்துகிறேன் என்று தெரிவித்தார். அதன்பின் நான் காமராஜரைப் போல் நேர்மையாக இருப்பேன் ஆனால் கல்யாணம் செய்யாமல் இருக்க மாட்டேன். இந்த தகவல் வெளியே சென்றால் அப்பா கோபித்துகொள்வார்; முக்கியமாக லக்ஷ்மிகரமான(வரலக்ஷ்மி) ஒருநபர் கோபித்துகொள்வார் என்று குறிப்பிட்டார் விஷால்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer