வனமகன் பட ஹீரோயின் சாயிஷாவுக்கு அப்படம் வெளிவருவதற்கு முன்பே இரண்டு தமிழ் படங்கள் புக்காகிவிட்டன. அது மட்டுமல்லாமல் தெலுங்கு ஏரியாவிலிருந்தும் அழைப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.
எல்லாவற்றுக்கும் காரணம், அழகு மட்டுமல்ல... அவரை வைத்து படம் இயக்கிய ஏ.எல்.விஜய்யும், கதாநாயகன் ஜெயம் ரவியும்தான்.
“அந்த பொண்ணு ஷுட்டிங் ஸ்பாட்ல அப்படியொரு கோ-ஆப்ரேஷன் கொடுக்குது. பந்தா துளி கூட இல்ல”. என்று இன்டஸ்ட்ரி முழுக்க ஊதி விட்டிருக்கிறார்கள்.
அது பலமாக வொர்க்கவுட் ஆகி, பார்க்கும் இடத்திலெல்லாம் சாயிஷா பற்றியே பேச வைத்திருக்கிறது பல பேரையும்.
தன் அடுத்த இலக்காக விஜய்யை பிக்ஸ் பண்ணியிருக்கிறாராம் சாயிஷா.
“சார்... நீங்க வனமகன் பார்த்துட்டு கருத்து சொல்லணும்” என்று விஜய்கே போன் போட்டு உருகினாராம்.
வழக்கம் போல தலைவர் சைலன்ட்டாக புன்னகைத்திருக்கிறார். அது வரமா, சாபமா? என்பதை வனமகன்தான் முடிவு செய்யணும்.
Tuesday, July 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment