நடிகை ஓவியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் அனைவரின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியிருக்கிறார் ஓவியா ஹெலன். மெட்ரோ சிரிஷ் நடிக்கும் படத்தில் ஓவியாக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பை தொடர்ந்து தற்போது புகழின் உச்சியில் இருக்கும் ஓவியாவை தங்களது படங்களில் நடிக்க வைக்க பல நடிகர்களும் இயக்குநர்களும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
இவர் முன்னதாகவே நடித்த யாமிருக்க பயமேன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ய்ப்பு கிடைத்துள்ளது, தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகைக்கு நடிகர் விஜய் சேதுபதியுடன் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி முடிந்த பிறகு, நடிகை ஓவியா திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பல இயக்குநர்களும் நடிகர்களும் ஓவியாவின் வருகைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, July 25, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment