Tuesday, July 18, 2017

வடக்கில் கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் பயங்கரவாதச் செயற்பாடுகள் இல்லை என்றும், நாட்டை மீண்டும் பயங்கரவாதச் சூழலுக்குள் அனுமதிக்கவும் முடியாது என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்போர் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பொதுமக்களின் நலனை கருதி மேற்கொள்ளக் கூடிய அனைத்து உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தற்பொழுது நாட்டில் நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் முயற்சிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு நட்பு ரீதியிலான பொலிஸ் சேவையை முன்னெடுப்பதற்காக ரஜரட்ட ஒலிபரப்பு சேவை முன்னெடுக்கும் ‘பொலிஸாரும் நீங்களும்’ என்ற வேலைத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer