Saturday, July 8, 2017

சினிமா தியேட்டர்கள் கதவடைப்பால் அதிகம் கலக்கத்திற்குள்ளானது ‘இவன் தந்திரன்’ படம்தான். இதற்கு முன் நான்கைந்து படங்கள் இயக்கியிருந்தாலும் முதன் முறையாக ஆர்.கண்ணன் இயக்கிய இப்படத்திற்குதான் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு.

ஆனால், ரசம் கொதிக்கிற நேரத்தில் சட்டியில் பல்லி விழுந்த கதையாகிவிட்டது. “கதவடைப்பா? ஐயய்யோ...” என்று கதறி அழுதார் கண்ணன்.

(இவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட) எல்லாரும் கூடி இறுதி முடிவு எடுத்ததில், போன வாரம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்கள் மட்டுமே ஓட அனுமதிக்கப்பட்ட அந்த ஆறு படங்களுக்கும் தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர் தரப்பு கமிஷனை எடுத்துக் கொள்ளாமல் முழு கலெக்ஷனையும் கொடுத்துவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டதாம்.

“இப்ப வக்கணையா சொல்வாங்க. கணக்கு கொடுக்கும்போதுதானே தெரியும். மேற்படி கமிஷன் வேற வேற கணக்குல உள்ளே வரும் என்று?” இப்படியும் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தின் நியாயமான மனசுகள் பல!

0 comments :

Post a Comment

 
Toggle Footer